இஸ்லாமாபாத்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் கால்பதித்துள்ளது. அங்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸஃபார் சர்ஃபராஸ் சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில், 50வயதான முன்னாள் கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கொரோனா தொற்று பாதிப்பால் பெஷாவரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஸஃபார் சர்ஃபராஸ் 1988-ல் தொழில்முறை கிரிக்கெட்டில் அறிமுகமானவர், இடது கை பேட்மேனான சர்ஃபராஸ், 15 முதல் தர கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி 616 ரன்கள் எடுத்துள்ளார். 6 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். 1994-ம் ஆண்டு அனைத்த ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றார். இதன்பிறகு பயிற்சியாளராகப் பணியாற்றினார்.
இவருடைய சகோதரர் அக்தர் சர்ஃபராஸ் சமீபத்தில் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்காக 4 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்