இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் சிலர் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக 490 கோடி டாலர் பணப் பரிமாற்றம் செய்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இது குறித்து 2016-ம் ஆண்டின் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தொகை இந்திய நிதித்துறை அமைச்சகத்துக்கு கைமாறிய பின்னர் இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்தது என்றும், பாகிஸ்தானின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்தது என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தனியாக விசாரணை நடத்த பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.