புதுச்சேரி:
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, ஆர்.காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான பாலன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏவும், என். ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளருமான பாலன் (67) கொரோனாவில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், நள்ளிரவு 1.30 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாலனுக்கு ஏற்கனவே, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2872 ஆக உள்ளது. இதுவரை 1720 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 1109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 44 பேர் கொரோனவுக்கு உயிரிழந்துள்ளனர்.
சமீபத்தில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி மாநிலத்தில் உயிரிழந்த முதல் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.