ஐதராபாத்:  மாநகராட்சி முன்னாள் பெண் மேயர் கணவரின் மண்டையை  ஆட்டோ டிரைவர் உடைத்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நிலம் அபகரிப்பு தொடர்பாக,  நிஜாமாபாத் முன்னாள் மேயரின் கணவரை, பாதிக்கப்பட்டந பரான  ஆட்டோ டிரைவர் தாக்கியதில், மேயர் கணவரின் மண்டை உடைந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

நிஜாமாபாத் நகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர்,  நீத்து கிரண். இவரது கணவர் பெயர் தண்டு சந்திரசேகர், இவர்கள் பிஆர்எஸ்  கட்சியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த மாநகராட்சி தேர்தலின்போது, நிஜாமாபாத் மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிட்டு மாநகராட்சி மேயராக  இருந்தவர்  நீத்து.

சம்பவத்தன்று,  கிரணின் கணவர் தண்டு சந்திரசேகர்,  நேற்று மாலை நகரத்தில் உள்ள உள்ளூர் கார்ப்பரேட்டர் அலுவலகம் அருகே தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தபோது‘, அங்கு வந்த ஆட்டோரிக்ஷா ஓட்டுநரால் கொடூரமாக தாக்கப்பட்டார்.  ஆட்டோ டிரைவர் ஷேக் ரசூல், திடீரென தமது ஆட்டோவில் இருந்து பெரிய சுத்தியலை எடுத்து வந்து தாக்கினார். இதில், சேகரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

சேகரை தாக்கிய ஆட்டோ டிரைவர் ரசூல் அங்கிருந்து தப்பி ஓடினார்.  காயமடைந்த சேகரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்த நிலையில்,  சேகரை தாக்கும் வீடியோவை சோஷியல் மீடியாவில் வெளியிட்ட ஆட்டோ டிரைவர் ரசூல், எதற்காக தாக்கினார் என்ற காரணத்தையும் அதில் சொல்லி இருந்தார்.

மேயரின் கணவர் சேகரும் அவரது நண்பர் கோபாலும், தமது நிலத்தை ஆக்ரமித்து கொண்டதாகவும், இடத்தை தரவேண்டுமானால் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் ரசூல் கூறியுள்ளார். ஆட்டோ டிரைவரான என்னால் எவ்வளவு பணம் கொடுக்க முடியாது அதனால்தான் அவரை தாக்கினேன் என ரசூல் கூறியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் தலைமறைவான ஷேக் ரசூலை தேடி வருகின்றனர்.