முன்னாள் எம்.பி. கொலை வழக்கு: முன்னாள் எம்.பிக்கு தூக்கு தண்டனை

Must read

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின்
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர

கொழும்பு:
லங்கையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை கொலை செய்த வழக்கில் இன்னொரு முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி, இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட12 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஷிராண் குணரட்ன, பத்மினி என் ரணவக்க, என்.சி.பி.சி. மொராயஸ் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடந்துவந்தது.
துமிந்த சில்வா
துமிந்த சில்வா

வழக்கு விசாரணை, முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 12 பேரில் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.    இந்த ஐவரில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும் ஒருவர்.
ஹிருனிகா பிரேமச்சந்திர
ஹிருனிகா பிரேமச்சந்திர

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக,  மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் புதல்வியும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருநிகா பிரேமச்சந்திர, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,  “கடந்த ஆட்சியில்  எனது தந்தையின் கொலைக்கு நியாயம் கிடைக்கவில்லை. தற்போதையை ஆட்சியில்தான்  நீதிமன்றம் சுதந்திரமாக இயங்குகிறது. அதன் விளைவாகவே  இந்த நல்ல  தீர்ப்பு கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.

More articles

Latest article