2019ம் ஆண்டு மிஸ் கேரளா அழகிப் பட்டம் வென்றவர் ஆன்சி கபீர்(25). அதே போட்டியில் முதல் ரன்னர் அப் ஆக வந்தவர் அஞ்சனா சாஜன்(26).
அவர்களின் கார் இன்று அதிகாலை எர்ணாகுளம் பைபாஸில் இருக்கும் ஹாலிடே இன் முன்பு சென்றபோது விபத்துக்குள்ளானது. ஆன்சி, அஞ்சனா மற்றும் 2 பேர் காரில் சென்றிருக்கிறார்கள்.
ஒரு பைக் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்தில் ஆன்சி மற்றும் அஞ்சனா சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற இருவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. அந்த இரண்டு பேரும் எர்ணாகுளம் மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, போக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறி வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்தார் ஆன்சி.