சென்னை: கொரோன தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு தமிழகஅரசு சார்பில் ரூ.5லட்சம் வைப்புத்தொகை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் உதயக்குமார் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும்போது, அந்தத் தொகையை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிட வேண்டும் எ;னறும்,  அந்த குழந்தைகளுக்கு பட்டப் படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும் அரசே ஏற்றிடவும்  தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 29ந்தேதி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில்,  செய்தியாளர்களை சந்தித்த, முன்னாள் அதிமுக அமைச்சர்,  ஆர்.பி. உதயக்குமார்,.  கொரோனா வால் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை செலுத்தப்படும் என்ற முதலமைச்சர் ஸ்டாலினின் அறிவிப்பு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என பாராட்டு தெரிவித்து உள்ளார்.