சேலம்: இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினர் – காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.காளியண்ணன் காலமானார். அவருக்கு வயது 101.  அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்துணைத்தலைவர் வாழப்பாடி இராம.சுகந்தன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் அருகே திருச்செங்கோடு மாவட்டம்,  குமரமங்கலத்தைச் சேர்ந்தவர்  டி.எம்.காளியண்ணன்.  ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தரான இவர்,  திருச்செங்கோட்டில் உயர்நிலைப்பள்ளியில் படிப்பை முடித்த அவர் மேல்நிலை கல்வியை சென்னை லயோலா மற்றும் பச்சையப்பா கல்லூரியில் பயின்றார். மாணவ பருவத்திலேயே தேசப்பற்று மீது தீராத ஆர்வம் கொண்டவர்.  சுதந்திரப் போராட்டத்தில் தேசிய தலைவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டார்.  ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், ராஜாஜி, காமராஜர் போன்ற பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியவர்.

1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1948ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத சூழலில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. இந்த சபைக்கு 40 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவராக  சென்னை மாகாணத்தில் இருந்து அப்போதைய மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த  டி.எம்.காளியண்ணன் சேர்க்கப்பட்டர்ர்.

மேலும்இ, 195ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டி யிட்டு வெற்றி பெற்றார். அதன்பின், 1957, 1962, 1962, 1967 ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வென்றி பெற்றார்.

1969ம் ஆண்டு நடைபெற்ற  மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டஇவரை எதிர்த்து, திமுக சார்பில், மறைந்த்ம  திமுக பொதுச்செயலாளரான க.அன்பழகன் நிறுத்தப்பட்டார். இந்த தேர்தலில் தோல்வி அடைந்த காளியண்ணன்,  பின்னர், 1967 முதல் 1977 வரை சட்டமேலவை உறுப்பினராக (எம்எல்சி)பதவி வகித்தார்.  1977 மற்றும்  1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளை வகித்த அவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்துள்ளார்.

வயது முதிர்வு காரணமாக கடந்த 200ம் ஆண்டுக்கு பிறகு அரசியலை விட்டு ஒதுக்கியவர்,  ஜனவரி 10ம் தேதி தனது 101வது பிறந்தநாள் விழாவை, அவரது குடும்பத்தினர் சிறப்பாக கொண்டாடினார்.

இந்த நிலையில், கட்ந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பு காரணமாக அவதிப்பட்ட அவர்  திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது. இதையடுத்து, மதியம் 2 மணி அளவில் காளியண்ணன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

டி.எம்.காளியண்ணனுக்கு ராஜேஸ்வரன், கிரிராஜ்குமார் என்ற இரு மகன்களும், சாந்தா, வசந்தா, விஜயா ஆகிய மூன்று மகள்களும் உண்டு. இதில் கிரிராஜ்குமார் காலமாகி விட்டார்.

டி.எம்.காளியண்ணன் மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்பாடி இராம சுகந்தன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,  இந்திய அரசியல் நிர்ணய சபையின் முன்னாள் உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவருமான திரு டி எம் காளியண்ணன் கவுண்டர் தன்னுடைய 101 வது வயதில் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்று செய்தி மிகவும் அதிர்ச்சிக்கு உரிய செய்தியாக வந்தது, அன்னாரது புகழ் என்றும் வாழ்க அவர் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.