திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் அச்சுதானந்தனின் உடல்நிலை  கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தனின் உடல்நிலை வயது முதிர்வு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் (வயது 101), கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்று 4வது நாளாக அவர்  ஐ.சி.யூவில் இருக்கிறார், அவரது  உடல்நிலையில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை எனவும், தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சுதானந்தனை கேரள முதல்வர் பிரனாயி விஜய் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.