டில்லி:

தான் மறுமணம் செய்ய இருப்பதால், தனக்கு விவாகரத்து தர வேண்டும் என்று டில்லி ஐகோர்ட்டில் காஷ்மீர் மாநில முதல்வர்  உமர் அப்துல்லா மனு தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வராக இருந்தவர் உமர் அப்துல்லா. தற்போது அவருக்கு 47 வயதாகிறது. காஷ்மீர்  தேசிய மாநாட்டுகட்சி தலைவராகவும் இருந்து வருகிறார்.

இவரது மனைவி பெயர் பாயல். இவர்களுக்கு 1994ம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையில் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த 2009ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கீழ் கோர்ட்டில், விவாகரத்து கோரி ஒமர் அப்துல்லா தாக்கல் செயத மனு கடந்த 2016-ம் ஆண்டு தள்ளுபடியானது. அதைத்தொடர்ந்து தற்போது டில்லி ஐகோர்ட்டில் மீண்டும் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில்,  தாம் வேறு ஒரு பெண்ணை  மறு மணம் செய்ய விரும்புவதால், தனக்கு முன்கூட்டியே விவகரத்து வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.

இந்த மனு டில்லி உயர்நீதி மன்ற  நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், தீபா ஷர்மா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  உமர் அப்துல்லாவின் மனைவி  பாயல் அப்துல்லாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.