ஸ்ரீநகர்:

பொதுபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில்  வைக்கப்பட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முக்தி இன்று திடீரென வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு பல ஆண்டுகாலமாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து,  கடந்த ஆண்டு (2010)  ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது, சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு  370-வது பிரிவை மோடி தலைமையிலான பாஜக அரசு ரத்து செய்தது. இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள்  பொதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்ப்டடு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

அங்கு இயல்புநிலை திரும்பி வந்துள்ள நிலையில், ஏற்கனவே  பல தலைவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்று மெகபூபா முப்தி தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்துக்கு மெகபூபா மாற்றப்பட்டு உள்ளார். இருந்தாலும் தொடர்ந்து காவலில் இருப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான உத்தரவை லெப்டினன்ட் கவர்னர் பிறப்பித்து உள்ளர்.