டெல்லி:

ந்தியாவின் “சிக்கனமான பந்துவீச்சாளர்” என்று அழைக்கப்படும் பாபு நட்கர்னி காலமானார். இவருக்கு வயது 86. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது.

இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளரான பாபு நட்கர்னிக்கு இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மும்பையைச் சேர்ந்தவர் நாட்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர்.

நாசிக்கில் பிறந்த நாட்கர்னி 1955 ம் ஆண்டில் டெல்லியில் நியூசிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். மேலும் 1968 ஆம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் போட்டியும் நியூசிலாந்திற்கு எதிராக எம்.ஏ.கே பட்டோடி தலைமையில் விளையாடி சாதனை படைத்தவர்.

சிற்நத கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான நட்கர்னி  தொடர்ச்சியாக 21 மெய்டன் ஓவர்களை டெஸ்ட் போட்டியில் வீசி உலக சாதனை படைத்துள்ளார்.  சிக்கனமான பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் நட்கர்னி  இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவரது இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்தியாவுக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் 1,414 ரன்கள் எடுத்து 88 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த செயல்திறன் 43 ரன்கள் விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 191 முதல் வகுப்பு போட்டிகளில் 500 விக்கெட்டுகளையும்,  8,880 ரன்களையும் எடுத்துள்ளார்.   டெஸ்ட் போட்டியில் அவரது பந்துவீச்சு பகுப்பாய்வு 32-27-5-0 ஆகும்.