பரங்கிப்பேட்டை,
தேர்தல் விதிமீறல் வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 2011 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் போட்டி யிட்டார்.
அப்போது, பெத்தான்குப்பம் என்ற இடத்தில் தேர்தல் விதி மீறி அதிக வாகனங்களில் வந்து பிரசாரம் செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் கலையரசி, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சுமார், 45 இரண்டு சக்கர வாகனம், மற்றும் 17 கார்களில் வந்து பிரச்சாரம் செய்ததாக தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி வாசுதேவன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை வழக்கில் இருந்த விடுதலை செய்து உத்தரவிட்டார்.