சென்னை: தமிழக சட்டப்பேரவையில், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி திருவுருவப் படத்திறப்பு விழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான அழைப்பிதழ்  வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற பேரவையின் நூற்றாண்டு விழாவும், மறைந்த முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படம் சட்டப்பேரவையில் திறக்கப்படும் விழாவும் ஆகஸ்டு 2ந்தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வடிவமைத்துள்ள அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.

அதில், தமிழநாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி திருவுருவப்பட திறப்பு விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த வருகை புரிவதாகவும், தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வகிப்பதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையிலும் விழா நடைபெறும் என, சபாநாயகர் அப்பாவு சார்பில் அழைப்பில் அடிக்கப்பட்டு உள்ளது.

இந்த அழைப்பிதழை, இன்று கவர்னர் பன்வாரிலாலுக்கு சபாநாயகர் அப்பாவு நேரில் வழங்கினார். தொடர்ந்து முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி வருகிறார்.