முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார், அவருக்கு வயது 77.

1948ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி கருணாநிதி – பத்மாவதி தம்பதிக்கு பிறந்த இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
1973ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான பூக்காரி திரைப்படத்தில் அறிமுகமான மு.க. முத்து, தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்தார்.
திரைப்படங்களில் பாடியும் உள்ள இவர் கடைசியாக 2012ம் ஆண்டு வெளியான மாட்டு தாவணி படத்தில் தேவா இசையில் பாடல் பாடியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel