டெல்லி:
முன்னாள் உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களை உறுப்பினராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் ராஜ்யசபாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உச்சநீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக மத்தியஅரசு நியமனம் செய்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. அதுபோல முன்னாள் நீதிபதிகளும் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இன்று ராஜ்யசபாவுக்கு உறுப்பினராக பதவி ஏற்க ரஞ்சன் கோகாய் வந்திருந்தார். அவருக்கு ராஜ்யசபா தலைவர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அப்போது, சில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். ஆனால், அதை கண்டுகொள்ளாமல் ரஞ்சன் கோகாய் பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
அதைத்தொடர்ந்து, கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சியினருக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்தார், உறுப்பினர்களின் இந்த செயல், அவர்களின் மாண்புக்கு பொருந்தாத செயல் என்று கண்டித்தார்.
[youtube-feed feed=1]