சென்னை:

மிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் இன்று இரவு காலமானார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் திங்கள்கிழமை இரவு காலமானார்.சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக கே.என். லட்சுமணன்(92) சிகிச்சை பெற்று வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு முறை தலைவராக இருந்த கே.என். லட்சுமணன், ஒரு முறை மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கிறார்.பாஜக முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்