பாட்னா: பீகாரில் கொரோனா பாதிக்கப்பட்ட ஐக்கிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. வும் முன்னாள் அமைச்சருமான மெவாலால் சவுத்ரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி பாதிப்பு 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனால், பல மாநிலங்களில் பகுதி நேர பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட, எம்எல்ஏவும், முன்னாள் கல்வி அமைச்சருமான மெவாலால் சௌதிரி மருத்துவமனையில் பாட்னாவில் உள்ள அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.