கோவை:

திமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி இன்று அதிகாலை காவல்துறையினரால் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் இருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட நிலையில், தான் கட்சியில் தொடர்ந்து வருவதாகவும், தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் எழுந்த புகாரின் பேரில் அவரை கைதுசெய்த சூலூர் காவல்துறையினர்,  விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது, அதிமுக முன்னாள் எம்.பி.க்களுக்கு மீண்டும் வாய்ப்பு தராத நிலையில், பலர் அதிமுக தலைமைக்கு எதிரான மனநிலையில் இருந்து வந்தனர். அப்போது, அதிமுக தலைமை மற்றும், பாஜக குறித்து கடுமையாக விமர்சித்தார். மேலும், ஓபிஎஸ்ஐ நம்பி நான், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் வந்தோம். ஆனால், அதற்கான பலன் இல்லை என்றவர்,  இதில் பலன் அடைந்தது ஓபிஎஸ், கே.பி. முனுசாமி, பி.எச். பாண்டியன் மட்டும்தான் என்று தடாலடியாக கூறினார். இதனால் அவரை கட்சித் தலைமை அவரை கட்சியில் இருந்து விலக்கி நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, அவர் முதல்வர் மற்றும் ஓபிஎஸ்சை கோட்டையில் சந்தித்து பேசினார். ஆனால், அவரை கட்சித் தலைமை இதுவரை சேர்க்காமல் இருந்து வந்தது. ஆனால், கே.சி.பழனிச்சாமி தான் மீண்டும் அதிமுகவில் இணைந்து விட்டதாக கூறியும் பலரை விமர்சித்தும் வந்ததால், அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது .

காவல்துறையினர் கே.சி.பழனிசாமி மீது 11 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து,  கே.சி.பழனிச்சாமியை கோவை சூலூர் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.