மும்பை: ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக, துருக்கி அதிபர் எர்டோகனின் முன்னாள் ஆலோசகர் மற்றும் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சியை டாடா குழுமம் நியமித்து உள்ளது. டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இல்கர் அய்சி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியாவை டாடா குழுமம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, நிர்வாகங்களில் பல்வேறு மாற்றங்களை சந்திரசேகரன் தலைமையிலான டாடா நிர்வாக குழு செய்து வருகிறது. டாடா புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணியை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வந்தது. சரியான நபர் ஏதும் கிடைக் காத நிலையில், துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த இல்கர் அய்சி வசப்படுத்தி உள்ளது.
இதையடுத்து, ஏர் இந்தியாவின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக இல்கர் அய்சி நியமிக்கப்பட்டு இருப்பதாக, இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. முன்னதாக இதுகுறித்து விவாதிக்க ஏர்இந்தியா நிர்வாகக் குழு இன்று கூடியது. இக்கூட்டத்திற்கு டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு. இந்த கூட்டத்தில் மேற்கொள்ளபட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, இல்கர் அய்சி நியமனத்துக்கு நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்து உள்ளததாகவும், அதையடுத்தே அவர் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
“ஏர் இந்தியாவை வழிநடத்தும் டாடா குழுமத்திற்கு அவரை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று டாடா சன்ஸ் குழும தலைவர் சந்திரசேகரன் வரவேற்றுள்ளார்.
தற்போது 51 வயதான இல்கர் அய்சி 1994ஆம் ஆண்டு பில்கென்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பட்டம் பெற்றார். 1995 இல் இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பை முடித்தார். 1997 இல் இஸ்தான்புல் நகரத்தில் உள்ள மர்மாரா பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் முதுகலை படிப்பை முடித்தார்.
துருக்கி கால்பந்து கூட்டமைப்பு, துருக்கி ஏர்லைன்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் டிஎஃப்எஃப் ஸ்போர்டிஃப் அனோனிம் சிர்கெட்டி மற்றும் கனேடிய துருக்கிய வணிக கவுன்சிலின் உறுப்பினர் மற்றும் அமெரிக்க-துருக்கி வணிக கவுன்சிலின் உறுப்பினராகவும் உள்ளார்.
துருக்கி நாட்டின் அதிபரான ரெசெப் தயிப் எர்டோகனின் ஆலோசகராக இருந்த இல்கர் அய்சி துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆக கடந்த 2015ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் துருக்கி ஏர்லைன்ஸ் உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் சிறப்பாக இருந்தது. துருக்கி ஏர்லைன்ஸ் வெற்றி மேலும் இல்கர் துருக்கி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இன்றைய வெற்றிக்கு வழிவகுத்தவர். ஆனால், கொரோனா காலக்கட்டம், மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரச்சனைகளில் துருக்கி சிக்கி தவித்ததால், துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன வளர்ச்சி பாதிக்கப்பட்டது. சுமார் 7 ஆண்டு காலம் அங்கு பணியாற்றிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் இறுதியில், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவர் டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.