சென்னை:
பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் ஏபிவிபி முன்னாள் நிர்வாகி மருத்துவர் சுப்பையா சண்முகம் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜீலை மாதம், 2020-ம் ஆண்டு மூதாட்டி வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அகில பாரத வித்தியார்த்தி பரிசத் எனப்படும் ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் மீது மூன்று பிரிவுகளின் கீழ் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்துவரும் மருத்துவர் சுப்பையா, தனது காரை மூதாட்டிக்குச் சொந்தமான பார்க்கிங் இடத்தில் நிற்க வைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையில் அவருக்கு சுப்பையா தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஆதம்பாக்கம் போலீசார் மருத்துவர் சுப்பையாவை கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் இவர் தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் போராட்டம் நடத்தி கைதாகி சிறையில் இருந்த ஏபிவிபி நிர்வாகிகளை சந்தித்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.