குவாலியர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரின் குடும்பத்தவர்கள் மீதான சொத்து ஆவண முறைகேட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது மத்தியப் பிரதேச பொருளாதார குற்றப்பிரிவு.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யவைத்து, மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சியமைய காரணமாக இருந்தமைக்காக இந்த பிரதிபலன் சிந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்று அரசியல்ரீதியாக விமர்சிக்கப்படுகிறது.
மேலும், பாரதீய ஜனதாவின் ஊழலுக்கு எதிரான போர் என்ற வெற்று கோஷம் மீண்டுமொருமுறை பொய்த்துப்போயுள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு குவாலியரில் நிலத்தை விற்றபோது, சொத்து ஆவணத்தில் பொய்யான தகவல் கொடுக்கப்பட்டது என்ற புகார் எழுந்ததையடுத்து வழக்குப் பதிவானது. இந்நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா தற்போது பாரதீய ஜனதாவில் இணைந்து செய்துள்ள உதவிக்கு கைமாறாக, அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன.