சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் தடயவியல் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறை, தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியில் அறையிலும் சோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து கோட்டையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை பழைய வழக்கு விசாரணை காரணமாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம் சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அமலாக்கத்துறையினர், தலைமைச்செயலகத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் அறையிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன,. இதனால், தலைமைச் செயலகத்தில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கைது செய்துள்ள நிலையில், மீண்டும் மற்றொரு திமுக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அமைச்சர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே, பொன்முடி இல்லத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வந்துள்ளனர். கம்ப்யூட்டரில் இருந்து ஆவணங்களை அழித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தடயவியல் சோதனை நடைபெறுவதாக கூறப்படு கிறது. மேலும் ஆவணங்கள் உள்ள கையெழுத்துக்களை தடயவியல் நிபுணர்கள் சரிபார்க்க உள்ளனர். ஏற்கெனவே பாட்னாவில் பாஜக ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட நேரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தனர்.
அதுமட்டுமின்றி தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் தற்போது பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வரும் அமலாக்கத்துறையினர் தலைமை செயலகத்தில் பொன்முடி அறையில் நடத்தலாம் என்பதன் அடிப்படையில் தலைமை செயலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனைக்கு பின்னரே அவனைவரும் அனுமதிக்கபட்டு வருகின்றனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில், பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றுள்ளார்.