புதுடெல்லி:

மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், வர்த்தக ரீதியான ஏற்றுமதி பலன்களை வாபஸ் பெறப்போவதாக இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா போன்ற ஏழை நாடுகளில் முன்னுரிமை பொதுத் திட்டம் (ஜிஎஸ்பி) ஒன்றை அமெரிக்கா செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் தொழிலாளர் சார்ந்த துறைகள் , இந்த ஜிஎஸ்பி ஏற்றுமதி சார்ந்தே செயல்பட்டு வந்தன.


இந்நிலையில், இந்தியாவுக்கு வருகை தர இருந்த அமெரிக்காவின் வர்த்தக அமைச்சர் ரோஸ், பயணத்தை ரத்து செய்திருக்கிறார்.

மோசமான சீதோஷ்ண நிலை காரணமாகக் கூறப்பட்டாலும், வர்த்தக ரீதியான ஏற்றுமதி பயன்களை திரும்பப் பெறுவதற்காகவே, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அரசின் இந்த முடிவால் வேலை இழப்பும் ஏற்படும் என இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் வர்த்தக கொள்கையை சரியாக கையாளாததால், வர்த்தக் ஏற்றுமதி பலன்கள் பறிபோய்விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.