டில்லி:

ந்தியாவிற்கு வரும் அந்நிய நேரடி முதலீடு சரிவடைந்துள்ளது. வரி காரணமாக கடந்த நிதி ஆண்டில்  அந்நிய முதலீடு சரிவு: நிலையில், இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த மொரிசியஸை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமயிலான பாஜக ஆட்சி இன்று பதவி ஏற்க உள்ள நிலையில், ஷேர் மார்க்கெட் அமோக லாபத்தில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில், அந்நிய நேரடி முதலீடு கடந்த 6 வருடங்களில் முதல் முறையாக 2018-2019 நிதியாண்டில் சரிவை சந்தித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து இந்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் முதலீடு செய்யப்பட்முடும் அந்நிய நேரடி முதலீடு 2018-2019 நிதியாண்டில் 1 சதவீதம் (3100 கோடி ரூபாய்) சரிந்து 3 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி மற்றும் வரிவிதிப்பில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அந்நிய முதலீடு குறைந்துள்ளதாகவும் காரணத்தை கூறி உளளது. இதில் பெரும் சரிவை சந்தித்துள்ளது டெலிகாம் துறை மற்றும் பார்மசூட்டிகல்ஸ் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

கடந்த  நிதியாண்டில் டெலிகம்யுனிகேஷன்ஸ் துறையில் வெளிநாட்டு முதலீடு 57 சதவீதம் குறைந்து 1 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. ஃபார்மா துறையில் அந்நிய முதலீடு 74 சதவீதம் சரிந்து 1859 கோடி ரூபாயாக உள்ளது.
அதுபோல,  இதுவரை இந்தியாவில் அதிக முதலீடுகளைச் செய்யும் நாடாக மொரீஷியஸ் இருந்தது. ஆனால் இந்த முறை மொரீஷியஸை பின்னுக்குத் தள்ளி சிங்கப்பூர் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.