சென்னை:

ந்தியாவிலேய முதன்முறையாக, மகளிர் சுய உதவிக்குழுவினருடன் உரையாடும் வகையில்,  ‘இ மதி’ என்ற  அம்மா சமுதாய வானொலி சேவை தமிழகத்தில்  இன்று தொடங்கி வைக்கப் பட்டது. இந்த வானொலி சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு மொபைல் போன் உதவியுடன் தமிழகத்தில் உள்ள  ஒரு கோடி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அரசின் செய்திகள் மற்றும் பல்வேறு திட்டங்களை கொண்டு செல்லும் வகையில்  சமுதாய வானொலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வானொலி மூலம், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களோடு முதல்வர் உள்பட முக்கிய மானவர்கள் தினசரி உரையாட இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல்வர் எடப்பபாடியின் பசுமை வழிச்சாலை  வீட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இ-மதி என்ற  அம்மா சமுதாய வானொலி சேவைடிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து,  புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கையை முதலமைச்சர் வெளியிட அமைச்சர் ஓ.எஸ் மணியன் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, சுகாதாரத்துறை சார்பில் 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.