டில்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புள்ள அமைப்புகள் மத்தியஸ்தரை பரிந்துரைக்கலாம் என்றும்  அறிவுறுத்தி உள்ளது.

அயோத்தி நிலம் தொடர்பாக மத்தியஸ்தர் நியமித்து, பிரச்சினை  முடிக்கலாம் என உச்ச நீதி மன்ற நீதிபதிகள் யோசனை தெரிவித்திருந்தனர். அது தொடர்பாக இன்று மீண்டும் விசாரணை நடைபேற்றது. அதைத்தொடர்ந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி நிலம் விவகாரம் தொடர்பான  மேல்முறையீடு மனுக்கள் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூ‌ஷண், எஸ்.ஏ.நசீர்  என 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  மத சம்பந்தப்பட்ட இந்த பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், அதற்காக மத்தியஸ்தர்களை நியமிக்கலாமா என கேள்வி எழுப்பியது. இதற்கு சில அமைப்புகள் ஆதரவும், சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங் களை தொடர்ந்து குறுக்கிட்டு பேசிய நீதிபதி பாப்டே, இந்த  மத சம்பந்தப்பட்ட பிரச்சினை யில்,  “கடந்த காலத்தில் என்ன நடந்தது, யார் படையெடுத்தார்கள், யார் ராஜா, கோவில் அல்லது மசூதிக்கு எந்த கட்டுப்பாடுமில்லை.  ஆனால், தற்போதைய சர்ச்சை பற்றி எங்களுக்குத் தெரியும். நாங்கள் சர்ச்சைக்கு தீர்வு காண்பது குறித்து மட்டுமே கவலைப்படுகிறோம் என்று கூறினார்.

இந்த விவகாரத்தில், “மத்தியஸ்தம் நடக்கும்போது, அது குறித்து அறிவிக்கப்படக்கூடாது என்றும், மத்தியஸ்த நடைமுறை முடிந்தபின், இந்த விவகாரத்தில் எவருக்கும் எந்தவொரு காரணமும் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

பின்னர்  பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கில்,  “நிரந்தர தீர்வை” வழங்குவதற்கான மத்தியஸ்தம் நியமனம் செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும்,  மத்தியஸ்தராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து தங்களது கருத்துக் களை வழக்கில் தொடர்புடையவர்கள் பரிந்துரைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

அதன்பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும்கூறி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.