மாணவர்கள் நலன் கருதி, ரஜினி பள்ளியின் ‘சீல்’ அகற்ற ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை,

மாணவர்களின் நலன் கருதி, ரஜினி மனைவியின் ஆஸ்ரம் பள்ளியின் சீலை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை கிண்டியில், தி ஆஷ்ரம் பள்ளியை நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்திவருகிறார். ஏற்கனவே சம்பள பிரச்சினை, அதிக கல்வி கட்டணம் என்ற பல்வேறு சர்ச்சைகளுக்குள்ளான இந்த பள்ளி நிர்வாகம், பள்ளி கட்டித்திற்கான வாடகை பாக்கி செலுத்த வில்லை என்று கூறி, கட்டிட உரிமையாளர்கள் பள்ளிக்கு பூட்டுபோட்டு சீல் வைத்தார்.

லதாரஜினிகாந்த் நடத்தி வரும் தி ஆஸ்ரம் என்ற பள்ளி வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனிடையே, வாடகை தரவில்லை என்று கூறி கடந்த 16-ம் தேதி, கட்டடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு என்பவர் பள்ளியைப் பூட்டினார்.

இதையடுத்து, பள்ளி மாணவர்கள் வேளச்சேரியில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

இந்த நிலையில், இதுகுறித்து லதா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் நேற்று முறையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று இநத் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, லதா ரஜினிகாந்த் சார்பாக ஆஜரான  வழக்கறிஞர் இளம்பரிதி ஆஜராகி, “ஆஷ்ரம் பள்ளிக் கட்டடத்துக்கு பூட்டுப் போட்ட அதன் உரிமையாளரின் நடவடிக்கையினால், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த உரிமையாளரிடமிருந்து 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், பூட்டை அகற்றக்கோரியும் கோரி ரிக்கை விடுத்தார்.

மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கட்டட உரிமையாளருக்கு உத்தரவிட்டதோடு, பிற்பகல் 3 மணிக்குள் பள்ளிக் கட்டடத்தின் சீல் அகற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து வழக்கறிஞர் ஆணையர் குழு நேரில் ஆய்வுசெய்து தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
English Summary
for students education purpose, Court order to remove Rajini' Ashram school 'seal'