அமிர்தசரஸ்:
ராகுல் காந்தி டிராக்டர் பேரணி – ஆன்லாக் 5.0-வை மீறிய கூட்டமாக பஞ்சாப் நகர விவசாயிகள் கலந்து கொண்டனர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.
மத்திய அரசு புதிதாக 3 வேளாண் சட்டங்களைk கொண்டு வந்துள்ளது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் 50 கி.மீ. தூரத்துக்கு டிராக்டர் பேரணியில் செல்கிறார்.
இந்த பேரணி 3 முதல் 5-ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்த பேரணி நடைபெறும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி இன்று தொடங்கி வரும் 6-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது