டில்லி:

8 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் வாங்கிய ஃப்ளாட்டிற்கு ரூ. 3 கோடியை ரியல் எஸ்டேட் நிறுவனம் திருப்பி வழங்கியுள்ளது.

மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. இதில் விளையாட்டு துறை அமைச்சராக ராஜ்ய வர்தன் சிங் ரத்தோர் பதவி ஏற்றார். இவர் பர்ஸ்வ்நாத் டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கடந்த 2005ம் ஆண்டில் குர்கான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ரூ. 75 லட்சத்துக்கு ஒரு ஃப்ளாட்டை வங்கி கடன் மூலம் முன்பதிவு செய்திருந்தார்.

2009ம் ஆண்டு அக்டோபரில் ஃப்ளாட் ஒப்படைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் வாக்குறுதிப்படி அந்த நிறுவனம் ஃப்ளாட்டை ஒப்படைக்கவில்லை. இதையடுதுது ரத்தோர் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் முறையிட்டார். ரத்தோருக்கு 8 மாதத்தில் ஃப்ளாட்டை ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உ ச்சநீதிமன்றம் 2 நாட்களின் ஃப்ளாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் பிறகு அந்த நிறுவனம் ரத்தோரிடம் ஃப்ளாட்டை ஒப்படைத்தது. பின்னர் ஃப்ளாட்டில் வாகன நிறுத்துமிடம் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.

இதன் பின்னர் இப்பிரச்னைக்கு நீதிமன்றத்திற்கு வெளிய தீர்வு காண அந்த நிறுவனத்தினர் ரத்தோரிடம் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அவர் செலுத்திய பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க சம்மதித்தனர். இதையடுத்து ரூ. 3 கோடியை 5 காசோலைகள் மூலம் திருப்பி வழங்கியிருப்பதாக ரத்தோர் வக்கீல் கவிதா வாதியா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.