டில்லி
இன்று நாட்டில் 75 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்படுவதையொட்டி பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி உள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் 75 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கட்டுப்பாட்டுடன் விழா நடைபெறுகிறது. இதையொட்டி இன்று டில்லியில் பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார்.
இந்த விழாவில் தலைவர்கள், முப்படை தளபதிகள் மற்றும் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் பங்கேற்றுள்ளனர். அவர் கொடி ஏற்றும் போது ஹெலிகாப்டர் மூலம் வானில் இருந்து மலர்கள் தூவப்பட்டுள்ளன.

கொடி ஏற்றுவதற்கு முன்னதாக பிரதமர் மோடி டில்லி ராஜ்காட் பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். அதன் பிறகு டில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி உள்ளார்.