சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என அறிவித்துள்ளது.
இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில்,
”15.02.2024 மற்றும் 16.02.2024: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
17.02.2024 முதல் 21.02.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 பாகை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.”
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.