திருநெல்வேலி
இன்று முதல் 4 நாட்களுக்கு நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அருவிகளில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். ஆண்டு தோறும் பாபநாசம் அகஸ்தியர் அருவி போன்று இந்த அருவியிலும் தண்ணீர் விழுவது வழக்கம்.
மணிமுத்தாறு அருவிக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஆனந்தமாகக் குளித்துச் செல்வது வழக்கமாகும்.
நெல்லை மணிமுத்தாறு அருவியில் இன்று முதல் 4 நாட்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அருவி பகுதியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.