சென்னை

ன்று முதல்3 நாட்களுக்கு இங்கிலாந்துக்கான சிறப்பு விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்

Close-up of United Kingdom visa in passport with Flag of the UK, conceptual political picture

கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டு அரசு அறிமுகப்படுத்திய இந்தியா- லண்டன் இளம் தொழில் வல்லுநர்கள் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விசா பெற இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டின் துணை தூதரக அதிகாரி ஹலிமா ஹோலண்ட் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,-

”இந்த சிறப்பு விசா பெறும் பிற நாட்டினர் 2 ஆண்டுகள் வரை இங்கிலாந்து நாட்டில் வசிக்கலாம், படிக்கலாம், பயணிக்கலாம் மற்றும் வேலை பார்க்கலாம். இந்த விசாவை பெறுவதற்கு gov.uk என்ற இணையளத்தில் இன்று முதல் 20-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்த விசாவை பெறுவதற்கு வயது வரம்பு 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இங்கிலாந்து நாட்டில் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேற்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் வங்கி கணக்கில் 2,530 பவுண்ட் (இந்திய நாட்டின் மதிப்பில் ரூ.2 லட்சத்து 77 ஆயிரம்) பணம் கட்டாயம் இருக்க வேண்டும். இந்த விசா மூலம் இங்கிலாந்து நாட்டுக்கு வருகை தருபவர்கள் 2 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் கட்டாயம் திரும்பி விட வேண்டும்”

என அறிவித்துள்ளார்