காத்மண்டு

மயமலையில் பனிமனிதன் காலடி தடம் என கூறப்பட்டது கரடியின் காலடித் த்டம் என நேபாள் ராணுவம் கூறி உள்ளது

இமலயமலை பகுதியில் எட்டி என்னும் இனத்தை சார்ந்த பனிமனிதன் வசித்து வருவதாக பலரும் நம்பி வருகின்றனர்.   எட்டி என்னும் இந்த் அபனி மனிதன் சராசரி மனிதர்களை விட மிகவும் உயரமாகவும்  அளவில் மிகப் பெரியவனாக இருப்பான் எனவும் கூறி வருகின்றனர்.   இந்த பனி மனிதன் இமயமலை, சைபீரியா, கிழக்கு மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளில் உள்ளதாக கூறப்பட்டு வ்ருகிறது.

இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள மக்கள் இந்த பனிமனிதன் அங்கு வசிப்பதை மிகவும் நம்பி வருகின்றனர்.   அவர்களில் இந்த பனிமனிதனை பார்த்ததாகவும் சொல்வது உண்டு.   ஆனால் அது குறித்து எந்த ஒரு ஆதாரமும் அவர்கள் அளித்ததில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி இந்திய ராணுவத்தினர் மகாலு மலைத் தொடரில் ஏறும் போது பல பிரம்மாண்டமான காலடி தடங்களை கண்டனர்.  அதை ஒட்டி அவர்கள் அந்த தடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பி  இது பனிமனிதனின் காலடித் தடங்களாக இருக்கலாம் என தெரிவித்தனர்.   இது குறித்து ஆராய நேபாள ராணுவத்துக்கு இந்த புகைப்படங்கள் அனுப்பப்பட்டன./

இதை ஆராய்ந்த நேபாள் ராணுவம், “புகைப்படத்தில் உள்ள்து எட்டி எனப்படும் பனிமனிதன் காலடித் தடங்கள் இல்லை.  அவை கரடியின் காலடி தடமாகும்.   எங்கள் ஆய்வில் இது உறுதி செய்யபட்டுள்ள்து.   இங்கு வசிக்கும் மக்களும் இது போல் கரடியின் காலடித் தடங்கள்  இங்கு வழக்கமாக காணப்படும் எனதெரிவித்துள்ளனர்” என இந்திய ராணுவத்துக்கு தெரிவித்துள்ளது.