டில்லி:

ர்நாடக தேர்தல் வெற்றி காரணமாக நாட்டில் பாரதியஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் 29 மாநிலங்களும், 7 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. இதில் 20 மாநிலங்களில் பாரதியஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  கர்நாடக தேர்தல் வெற்றி  மூலம் பாரதீய ஜனதா ஆட்சி நடைபெறும் மாநிலம் 21 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் பாரதியஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் 9 மாநிலங்களிலும், கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 11 மாநிலங்களிலும் ஆட்சி நடத்தி வருகிறது. தற்போதைய கர்நாடக தேர்தல் முடிவை தொடர்ந்து 21வது மாநிலமாக பாஜ ஆட்சி நடைபெற உள்ளது.

இவற்றில் 14 மாநிலங்களில் மட்டுமே பாரதியஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக பதவியில் இருந்து வருகிறார்கள்.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் மாநிலங்கள்

அருணாச்சலபிரதேசம்,

சத்தீஸ்கர்,

குஜராத்,

அரியானா,

இமாச்சலபிரதேசம்,

மத்திய பிரதேசம்,

ராஜஸ்தான்,

உத்தரபிரதேசம்,

உத்தரகாண்ட்

கர்நாடகம் (waiting)

கூட்டணி கட்சிகள் உதவியுடன் பா.ஜ.க. ஆட்சி செய்யும் 6 மாநிலங்கள்

அசாம் (அசாம் கன பரிஷத், போடடோ லேண்ட் கட்சிகள் ஆதரவு),

கோவா (கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டி ராவாடி கோமந்தக் கட்சிகள் ஆதரவு),

ஜார்க்கண்ட் (அகில ஜார்க்கண்ட் மாணவர்கள் யூனியன் ஆதரவுடன்),

மராட்டியம் (சிவசேனா ஆதரவுடன்)

மணிப்பூர் (நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி மற்றும் லோக் ஜனசக்தி ஆதரவுடன்)

திரிபுரா (திரிபுரா மக்கள் முன்னணி)

பா.ஜ.க. ஆதரவுடன் கூட்டணி கட்சி ஆட்சி செய்யும் 5 மாநிலங்கள்

பீகார் (ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு),

காஷ்மீர் (மக்கள் ஜன நாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சிக்கு பா.ஜ.க. ஆதரவு),

நாகலாந்து (நாகா மக்கள் முன்னணிக்கு ஆதரவு)

சிக்கிம் (சிக்கம் ஜன நாயக முன்னணிக்கு ஆதரவு)

மேகலயா( தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவு)

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்கள்:  பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி.

மாநிலக்கட்சிகள் ஆட்சி செய்யும் 6 மாநிலங்கள்: 

தமிழ்நாடு (அ.தி.மு.க)

ஆந்திரா (தெலுங்கு தேசம்)

கேரளா ( மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு)

மேற்கு வங்காளம் (திரிணாமுல் காங்கிரஸ்)

ஒடிசா (பிஜூ ஜனதாதளம்)

தெலுங்கானா (தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி)