டெல்லியில் 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

ஒரு வாரத்தில் நான்காவது முறையாக, பள்ளிகளுக்கு மிரட்டல் செய்திகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

தவிர, பெங்களூரு நகரில் உள்ள 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் பள்ளிகளை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர், காவல் படை மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனால் நாடு முழுவதும் சுமார் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு சோதனை நடைபெற்று வருகிறது.