ராமநாதபுரம்: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை பொன்று ராமநாதபுரத்திலும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. காதலுடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், காதலனை விரட்டிவிட்டு, காதலியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதுதொடர்பான புகாரின்பேரில் குற்றவாளிகள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், போதை பொருள் விற்பனை போன்ற சம்பவங்களால், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதால், காவல்துறைமீது மக்களின் நம்பிக்கை கேள்விக்குறியாகி உள்ளது.
சம்பவத்தன்று, ராமநாதபுரத்தை அடுத்த புத்தேந்தல் எனும் பகுதியில் காதலர்கள் தனிமையில் இருந்த போது அந்த வழியே வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் காதலனை அடித்து துரத்தி அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், அந்த பெண்ணை நான்கு பேரும் செய்து சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தன்னை தாக்கிய நபர்கள் குறித்து இளைஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அந்த நான்கு இளைஞர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். . மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்தின் கடைக் கோடியில் உள்ள ராமநாதபுரத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.