டில்லி
பசுவை விட்டுவிட்டு நாட்டின் முன்னேற்றத்தையும் கவனியுங்கள் என மக்களுக்கு தருண் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆர். எஸ். எஸ். இயக்கத்தின் பாஞ்சஜன்யாவில் சமீபத்தில் தருண்விஜய் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :
கேரளாவில் கன்றைக் கொலை செய்த காங்கிரஸும் கம்யூனிஸ்டும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
இந்த செயல் நாட்டையே உலுக்கியது என்பதை மறுக்க முடியாது.
இவர்கள் செய்த இந்த வெறிச்செயல் தங்களின் அரசியல் நோக்கத்துக்காக மிருகவதையை ஆதரிக்கும் செயலாகும்.
இதன் மூலம் இந்து மக்களின் நம்பிக்கையை புண்படுத்த முயன்றுள்ளனர்.
இந்துமதம் என்பது சமையல் சம்பந்தப்பட்டது அல்ல.
மாட்டுக்கறி தடை என்பது முக்கியம் அல்ல.
ஏழை மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே தற்போதைய தேவை.
இந்துக்கள் பசுவை புனிதமாக நினைப்பது வரவேற்கத்தக்கதே.
ஆனால் பசுக்களை அனைவரும் பராமரிக்கிறோமா?
கோயில்கள் புனிதம் என்கிறோம்.
ஆனால் கோயிலின் புனிதத்தன்மையை மதிக்கிறோமா?
பலரும், பசுக்களை பராமரிப்பது அரசின் கடமை என நினைத்து ஆதரவற்ற பசுக்களைக் காக்க முன்வருவது இல்லை.
அப்படி நினைப்பதே மாபெரும் பாவமாகும்.
இந்தியா பல்வேறு விதமான கலாச்சாரங்களை உள்ளடக்கிய நாடு.
வட இந்தியாவின் உணவுப் பழக்கமும், தென் இந்தியாவின் உணவுப் பழக்கமும் முழுக்க மாறுபட்டவை..
அதனால் ஒரே உணவுப் பழக்கத்தை நாடெங்கும் திணிக்க முடியாது.
நாம் முன்னேற்றத்தை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளோம்.
தற்போது நமக்கு நமது மூத்த அறிஞர்களின் அறிவுரை தான் மிகத்தேவை.
இதை மனதில் கொண்டு விவேகானந்தரும், கோவல்கரும் கூறிய அறிவுரைகளை நாட்டு மக்களுக்கு கொண்டு சேருங்கள்.
இவ்வாறு பாஞ்சஜன்யாவின் செய்தியில் தருண் விஜய் கூறி உள்ளார்.