டெல்லி:

த்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகிக்கும் நிர்மலா சீத்தாராமன், இன்று 2வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, நிதி அமைச்சராக நிர்மலா சீத்தாராமன் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே கடந்த ஆண்டு அவர் நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், இன்று 2வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.  இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் வரலாறு காணாத  சரிவைச் சந்தித்துள்ள நிலையில், இன்றைய பட்ஜெட்டில் என்ன சொல்லப் போகிறார் என்பதை தொழில் அதிபர்கள் உள்பட சாமானிய மக்கள் வரை அனைவரும் அறிந்துகொள்ள எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

வேலையில்லா இளைஞர்களின் எதிர்காலம், சம்பளதாரரின் வரி விகிதம், ஜிஎஸ்டி பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் நாடு சிக்கி உள்ள நிலையில், இன்றைய நிதி நிலை அறிக்கை சொல்லப்போவது என்ன என்பது இன்று பிற்பகல் தெரிய வரும்….