சென்னை
நெல்லை எக்ஸ்பிரசில் கொண்டு செலப்பட்ட ரூ. 4.5 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்தனர்.
வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று பிரசாரம் 17-ந்தேதி மாலையுடன் ஓய்கிறது. எனவே அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் காரிலும் தீவிரச் சோதனை நடத்தப்படுகிறது. நேற்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.