சென்னை: சென்னை அருகே போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பழக்கமும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், போதை மாத்திரை உள்பட போதை பொருட்களை  விற்பனை செய்த இளஞ்ஜோடியை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர்.

ஏற்கனவே கடநத் ஜூன் மாத இறுதியில்,  சென்னையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை போலீசார் கைது செய்தனர். அப்போது, கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் காட்டாங்குளத்தூர் தனியார் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏராளமான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சில மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அதற்கு காரணமாக கல்லூரி நிர்வாகம் மீது காவல்துறையினர் எந்தவொரும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை தலைவிரித்தாடுகிறது.  குறிப்பாக பள்ளிகள்,  கல்லூரிகள் மற்றும் ஐடி இளைஞர்கள் அதிகமுள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.  சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, பெருங்களத்தூர், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்களில் வேலை செய்யும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா, கஞ்சா ஆயில், போதை மாத்திரைகள் விற்பனை நடைபெற்று வருகின்றன. பணம் சம்பாதிப்பதற்காக இப்பகுதியில் பல்வேறு குழுக்கள் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. வயது பாகுபாடின்றி இளைஞர்கள், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனைத் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அரசில் கட்சியினரே இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை மெத்தனம் காட்டுகிறது. இதுபோன்ற  காரணங்களால்தான்,   ஏரியா போட்டி மற்றும் கட்டப்பஞ்சாயத்து காரணமாக சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இந்த நிலையில்,  தாம்பரம் அருகே குரோம்பேட்டையில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காதல் ஜோடியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காதல் ஜோடி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, அவர்கள் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் இருவரும் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில், போதை மாத்திரையை விற்பனை செய்து வந்தது,  திருவண்ணாமலையைச் சேர்ந்த விஜய் என்றும், விபத்து காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விஜயின் வீட்டில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 வலி நிவாரண மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா, 36 ஆயிரம் ரூபாய் பணம், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ” மேலும்,  போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை விவகாரத்தில் விஜயின் காதலி ஜாஸ்மினுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஜாஸ்மினையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னையில் பள்ளி மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  சென்னை மட்டுமின்றி கோவை உள்பட  தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போதை மாத்திரை விற்பனை கும்பல் புழக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சேலத்தில் போதை மாத்திரை விற்பனை கும்பல் சிக்கியது. அதுபோல கடந்த வாரம் சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை செய்ததாக 5 பேர் சிக்கி உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவ்வப்போது பல போதை பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.