ஊரடங்கு முடிந்து, விமான நிலையங்களும், நாடுகளின் எல்லைகளும் மீண்டும் திறக்கப்பட்டு மக்கள் பயணம் செய்ய முடிந்தால், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும், நிலையங்கலும், ஆரோக்கியமான விமான பயணத்தை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளனவா ? உங்களின் வழக்கமான விமானப் பயண முறையில் மாற்றம் வருமானால், ஏற்க தயாராக இருக்கிறீர்களா? அமெரிக்காவின், 9/11 க்குப் பிறகு எவ்வளவு முன்னேற்பாடுகள், கட்டுபாடுகள் தேவைப்பட்டது? தற்போது அதைவிட கூடுதலாக இருக்குமா? அல்லது குறைவாகவா? அடுத்தது என்ன?

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நடைமுறைகள் மற்றும் தற்போதைய பரிந்துரைக்கப்படும் மாற்றங்களையும், விமான நிலையங்கள் வணிக வழித்தடங்களுக்கு பாதுகாப்பாக மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பே பரிந்துரைக்கப்படும் பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு, வல்லுநர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயை ‘புதிய பயங்கரவாதம்’ என்று குறிப்பிடுகின்றனர். இது விமானத் தொழில் துறையை இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.
நாம், பயணிகள் மற்றும் உடமைகளை செக்-இன் செய்வதில் இருந்து விவாதிக்கலாம். வல்லுனர்களின் கணக்கீடுகளின் படி, ஒரு செக்-இன் நடைமுறைக்கு நான்கு மணிநேரம் வரை ஆகலாம் என்றும், சமூக விலகல், பயணிகள் மற்றும் சாமான்களை துப்புரவு செய்தல், பல்வேறு வரிசைகளுடன், காத்திருக்கும் இடத்தை பரந்த இடமாகக் கொண்டு, விமானத்தில் பயணிகளை ஏற்றுதல் ஆகியவை இதில் அடங்கும் என்று வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ளது. 10-இல் 9 நிபுணர்கள் கேபின்களை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டியதன் காரணமாகவும், விமான நிலையங்களில் சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதாலும், அதிக இடைவெளியில் குறைவான விமானங்கள் பறப்பது நல்லது என பரிந்துரைக்கின்றனர். மேலும், குறுகிய காலத்தில், குறைக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையுடன், குறைந்த தொலைவு உள்ள இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் வேண்டுமானால் தாமதங்களைக் குறைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்படுகிறது.

இன்னும் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
தற்போதைய நிலையில், பின்வரும் செயல்பாடுகள் பரிசீலனையில் உள்ளன. கேபின் பைகள் எனப்படும், விமானத்திற்குள் எடுத்துச் செல்லும் பைகளை தடை செய்தல்,  ஓய்வறைகளை தடை செய்தல், தானியங்கி மேம்படுத்தல்களை நிறுத்தி வைத்தல், முகக் கவசம், அறுவை சிகிச்சை கையுறைகள், சுய சரிபார்ப்பு, சுய-உடமைகள்-டிராப்-ஆஃப், நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட், உடனடி துரித இரத்த பரிசோதனைகள், துப்புரவு-கிருமி நீக்க சுரங்க வழிகள் போன்றவை ஆகும். டிஜிட்டல் தொழில்நுட்பங்களும் ஆட்டோமேஷனும் விமான பயணத்தின் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும். விமான நிலையங்களில் “தொடு இடங்களை” குறைக்க வேண்டிய அவசியம், பயோமெட்ரிக் போர்டிங் முறை கட்டாயமாக்கப்படுவதை முன்வைக்கிறது. இது பயணிகளின் முக அடையாளத்தை மட்டும் பாஸ்போர்ட்டாக கொண்டு விமானங்களில்  ஏற அனுமதிக்கும். பிரிட்டிஷ் ஏர்வேஸ், குவாண்டாஸ் மற்றும் ஈஸிஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) கருத்துப்படி, “ஹீத்ரோ, ஜே.எஃப்.கே மற்றும் சிங்கப்பூர் சாங்கி போன்ற முக்கிய விமான நிலையங்களில் ஆன்லைன் செக்-இன் மற்றும் தொடும் தொடர்பு இல்லாமல் பணம் செலுத்துதல் முறையை வழக்கமாக்கப்பட்டு உள்ளன. ஆதரவற்ற சிறார்களுக்கு அல்லது உதவி தேவைப்படும் மற்றவர்களைத் தவிர, விமானி மற்றும் பயணிகள் அல்லாதவர்களை உள்ளே நுழைவதைத் தடுப்பதன் மூலம் அனைத்து விமான நிலையங்களும் தீவிர மாற்றங்களை தொடங்க வேண்டிய அவசியத்தில் உள்ளன.

பயண பைகள், கிருமி நீக்கம் செய்வதற்கான சுரங்க வழிகள் போன்றவற்றை கைவிட வேண்டுமெனில், நமக்கு இன்னும் திறனுள்ள, விரிவான அனைத்து-பயோமெட்ரிக் செக்-இன் அமைப்புகள் மற்றும் திறமையான டி.ஒய்.ஐ தேவைப்படும். (செக்-இன் செய்யப்பட்ட பிறகு, கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை வழியாகவும் சாமான்களை வைத்து எடுத்துச் செல்லலாம். காத்திருப்பு இடங்கள், காரிடார் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமெனில், நீண்ட வரிசைகள் மற்றும் பெரிய இடங்கள், வாடிக்கையாளர் சேவை கவுண்டர்களில் பிளெக்ஸி கண்ணாடி தடுப்புகள் அல்லது ல்லது பிற பாதுகாப்பு தடைகள், கை துப்புரவு நிலையங்கள் மற்றும் காய்ச்சல் அளவுக்கான உடல் வெப்பநிலை கண்டறியும் வெப்பநிலை கண்டறியும் கருவிகள் ஆகியவற்றை நிறுவ வேண்டும். வெப்பநிலைக் கண்டறியும் கருவிகள் ஏற்கனவே சில பெரிய விமான நிலையங்களில் பயன்பாட்டில் உள்ளது. “விமானகளில் பயணிக்க  தகுதியுள்ளவர்கள்” மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” என்று சமீபத்திய அறிக்கையில், விமான நிறுவனங்களுக்கான யுக்திகளை வகுக்கும் நிறுவனமான சிம்பிளிஃப்ளையிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயணிகள் பயணத்தில் 70 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பகுதிகள் மற்றும் வசதிகள் மாற்றத்திற்கு உள்ளாகும் அல்லது முற்றிலும் புதிதாக மாற்றப்பட்டு அறிமுகப்படுததப்படும் என்று அடையலாம் கண்டுள்ளது. உதாரணமாக, COVID-19 க்குப் பிறகு பாதுகாப்பாக பயணிக்கும் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்காக செக் இன்னுக்கு பிறகு லக்கேஜ்கள் எலக்ட்ரோஸ்டேடிக் அல்லது புற ஊதா கிருமி நீக்கம் மூலம் பயணப்பைகள் ‘கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுத்தப்படுத்தப்படும் என்று பரிந்துரைக்கிறது. “எதிர்காலத்தில் புற ஊதா கிருமி நீக்க முறை ஒரு இன்றியமையாததாக மாறலாம்” என்று டெலிகிராப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது எதிர்காலத்தின் கட்டாயமாக தோன்றுகிறது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையம், அதன் பாதுகாப்பு பற்றாக்குறையை சமாளிக்க இந்த முறையை தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

போர்டிங் முறை
விமானத்தினுள் பயணிகளை அனுமதிக்கும் போர்டிங் செயல்முறை முற்றிலும் “டச்லெஸ்’ எனப்படும் “தொடும் செயல்முறையை தவிர்த்தல்” ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பயணிகளை முக அங்கீகாரம் செய்து அனுமதித்தல், போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. இது ஏற்கனவே, சில அமெரிக்க விமான நிலையங்களில் சர்வதேச விமானங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. விமானங்களில், தடுக்கப்பட்ட இருக்கைகள், தானியங்கி தெளிப்பான்கள், பாதுகாப்பு கவசத்தில் பயணிகள் அமர்தல், மற்றும் கட்டாய முகக் கவசங்கள் போன்றவை கண்டிப்பாக இருக்கும். ஏர் பிரான்ஸ் மற்றும் கே.எல்.எம் போன்ற முக்கிய ஐரோப்பிய விமான நிறுவனங்கள் ஏற்கனவே அவற்றை கட்டாயமாக்கியுள்ளன. மற்ற எல்லா விமான நிறுவனங்களும் விரைவில் இதைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உணவைப் பொறுத்தவரை, குறுகிய தூர விமானங்களில் சேவையை முற்றிலுமாக நிறுத்துவதே நல்லது எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் விமான நிறுவனங்கள் நீண்ட தூர விமானங்களுக்கு ‘எளிய புத்துணர்வு தரும்’ உணவு வழங்கலை மனதில் வைத்துள்ளன. உணவு வழங்குவதை முற்றிலுமாக நிறுத்த ஹாங்காங் ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது.

வருகை
வருகையைப் பொறுத்தவரையில், சர்வதேச பயணிகள் சில வகையான நோய் எதிர்ப்பு சக்தி ஆவணங்கள் அல்லது பாஸ்போர்ட்டைக் காட்ட வேண்டும் என, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) எல்லைக் கட்டுப்பாட்டு துறைக்கு பரிந்துரை செய்துள்ளது. ஒருவேலை தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டியிருக்கலாம். “வருகை தரும் பயணிகள் தங்களது இறுதி இலக்கு விமான நிலையத்தில், மற்றொரு வெப்பநிலை பரிசோதனை மற்றும் COVID-19 க்கான இரத்த பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று கான்டே நாஸ்ட் கணித்துள்ளது. “ஹாங்காங் மற்றும் வியன்னா போன்ற சில விமான நிலையங்கள் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு கோவிட்-19 க்கான இரத்த பரிசோதனைகளை செய்கின்றன.  இருப்பினும், அந்த வகையான சோதனைகள் குறுகிய காலத்திர்க்கானவை.” வெப்பநிலை பரிசோதனையை செய்ய IATA பரிந்துரைக்கப்படுகிறது. “பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஈஸிஜெட் மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர்லைன்ஸ் யுகே, பயணிகளை அவகளின் பயணத்திற்கு முன்பே பரிசோதிக்கும், “முன் பரிசோதித்தல்” முறையை செய்தல் வேண்டும் என்று கூறியுள்ளதாக” டெலிகிராப் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சோதனைகள் மற்றும் ஸ்கிரீனிங் கட்டாயமாக்குவது குறித்து நிலையான அறிவிப்புகள் இதுவரை எதுவும் இல்லை என்றாலும், விமான நிலையங்களும் விமான நிறுவனங்களும் சீரான விதிமுறைகளை பின்பற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, பயணிகளின் வெப்பநிலை மற்றும் பிற கோவிட் -19 அறிகுறிகளைச் சரிபார்க்க யார் பொறுப்பு என்பது தெளிவாகத் தெரியவில்லை. விமான நிலையங்களுக்குள் சுகாதார பரிசோதனைகளை ஒருங்கிணைக்க ஒரு புதிய கூட்டு சுகாதார நிறுவனம் ஒன்று  உருவாக்கப்படும் என்று சிம்பிள்ஃபிளையிங் கணித்துள்ளது. 9/11 கால கட்டுபாடுகளை  உடனடியாக செயல்படுத்துவதைப் போல, முயன்று கற்றுகொள்ளல் முறையை பின்பற்றி ஒரு இறுதி வடிவம் எடுக்கப்பட வேண்டும்.

“டிஜிட்டல் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய செக்-இன் செய்வதற்கான புதிய நெறிமுறைகள், சாமான்கள் சேமிக்கப்படும் இடம் உள்ளிட்ட அடிக்கடி பயன்படுத்தப்படும் இடங்களில் கை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், பணத்திற்கு பதிலாக தொடர்பு இல்லாத கட்டண முறை, இரண்டு மீட்டர் இடைவெளி விதியை பின்பற்ற கடினமாக இருக்கும் லிஃப்ட்களை விட்டு அடிக்கடி படிக்கட்டுகளைப் பயன்படுத்துதல், மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் இடைவெளி வேண்டி நகர்த்தி வைத்தல் போன்றவை தற்போதைய பரிசீலனையில் இருக்கும் சில எடுத்துக்காட்டுகள் ஆகும். ”WTTC ஒரு சமீபத்திய அறிக்கையில், ஒரு சரியான தடுப்பூசி வெகுஜன அளவில் கிடைப்பதற்கு முன்னர், இயல்புநிலை திரும்புவதால், வரவிருக்கும் மாதங்களில் விமான பயணம் படிப்படியாக வளர்ச்சியை எதிர்கொள்ளும் என்று சர்வதேச நிறுவனம் கூறுகிறது. இந்த பயணமானது முதலில் உள்நாட்டிலும், பின்னர் பிராந்தியங்கள் அளவிலும், அண்டை நாடுகளுக்கு இடையிலும் இறுதியாக கண்டங்கள் முழுவதும் நீண்ட தூர சர்வதேச இடங்களுக்கு பயணங்கள் அதிகரிக்கும். COVID-19 க்கு குறைவான பாதிப்பு இருப்பதாகத் தோன்றும் 18-35 வயதுக்குட்பட்ட இளைய பயணிகள், மீண்டும் பயணத்தைத் தொடங்கியவர்களில் முதன்மையானவர்களாக இருப்பார்கள் என்று WTTC நம்புகிறது. WTTC தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி குளோரியா குவேராவின் கூற்றுப்படி, புதிய இயல்பு வாழ்கையில், பயணங்கள் மேற்கொள்ளும் வகையில், உரிய தரக் கட்டுபாடுகள் மற்றும் நெறிமுறைகள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதாவது, நுகர்வோர் மீண்டும் பயணங்களைத் திட்டமிடத் தொடங்குகையில், உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறையை மீட்பதற்கான பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பாதையை அமைக்கும் வழிமுறைகளுக்கு ஏற்றவாறு சிந்திக்க வேண்டும்”

சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ), விமான நிலைய கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏசிஐ), குரூஸ் லைன்ஸ் இன்டர்நேஷனல் அசோசியேஷன் (சிஎல்ஐஏ), யுனைடெட் ஸ்டேட்ஸ் டிராவல் அசோசியேஷன் (யுஎஸ்டிஏ), பசிபிக் ஆசியா பயண சங்கம் (PATA), சர்வதேச சிவில் விமான அமைப்பு (ICAO), பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD), ஐரோப்பிய பயண ஆணையம் (ETC) மற்றும் உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) போன்ற உலகளாவிய அமைப்புகளின் கருத்துக்களுக்கு ஏற்றவாறு புதிய வழிமுறைகளும், நெறிமுறைகளும் வடிவமைப்படவுள்ளன. ஆனால் புதிய நெறிமுறைகள் மற்றும் தரக் கட்டுபாடுகள், பயோமெட்ரிக் அமைப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் மற்றும் பயண மீட்புக்கான பாதுகாப்பான பாதைக்கான சிறந்த நோக்கங்களுடன், பயணங்கள் திட்டமிடப்பட்டாலும், இந்தத்துறையின் எதிர்காலம் இன்னும் இருண்டதாகவே உள்ளதாக நியூயார்க் டைம்ஸின் நிராஜ் சோக்ஷி விளக்குகிறார். ஏனெனில்,  “உலகின் பெரும்பகுதி வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. உரிய தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இல்லை. அதற்கு, வருடங்கள் ஆகலாம் என்ற நிலை இல்லையெனினும், குறைந்தது சில மாதங்கள் ஆகலாம். நெருக்கடிக்கு முன்னர் இருந்ததைப் போல, அனைத்து விமானங்களும் இயக்கம் நிலை வர எவ்வளவு காலமெடுக்கும் என்று அறுதியிட்டுக்கூற முடியாத நிலை உள்ளது.  9/11 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் இருந்ததைப் போலவே இந்தத் தொழிலையும் கட்டுபாடுகளுடன் மாற்ற முடியும். ஆனால்,  இந்த செயல்பாட்டில், ஏற்கனவே இருந்ததைப் போல, சில விமான நிறுவனங்கள், குறிப்பாக சிறியவை, திவால்நிலைக்கு தள்ளப்படும் அல்லது கையகப்படுத்தும் இலக்குகளாக மாறும். “நெரிசலான விமானங்களில் தொற்று ஏற்படும் அச்சம், விமானத்தின் இருக்கைகளை மறுசீரமைப்பு செய்யவேண்டிய நிலைக்கு வழிவகுக்கும். கேரியர்கள் ஆரம்பத்தில் எச்சரிக்கையாக,  பயணிகளை பல தள்ளுபடிகளை வழங்கி, கவர்ந்திழுக்கலாம்.  ஆனால் விமானங்களை நிரப்ப முடியாவிட்டால், அவர்கள் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டியநிலை வரலாம்.”
எனவே எதுவும் உறுதியாகாத இந்த நிலையில் விமான நிறுவனங்கள்எச்சரிக்கையுடன் இல்லாமல், அவசரப்படுமானால், அவர்களின் நிலை இன்னும் மோசமாகலாம். பொறுத்திருந்துதான் பார்ப்போமே!!!
English: Cecilia Rodriguez
தமிழில்: லயா