காஞ்சிபுரம்:

ரடங்கின் போதும் மனிதாபிமானத்துடன் உதவி வரும் பூக்கார பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் அர்ச்சகர் நடராஜா சாஸ்திரி பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ஊடரங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், கோவிலுக்கு பூஜைக்கு மட்டுமே நாங்கள் போய் வருகிறோம். அப்போது, கோவில் அருகில் ஒரு பூக்காரம்மா பூ விற்றுக் கொண்டு இருப்பதை பார்த்து ஆச்சரியபட்டேன். கோயிலுக்கு யாரும் வராத நிலையில் இந்த பூக்காரம்மா தினமும் கடை வைத்து யாருக்கு வியாபாரம் செய்கிறார் என்ற கேள்வி எழுந்ததது. அதை அவரிடமே கேட்டு விட எண்ணி, அவரைப் பார்த்து நான் ஏம்மா ஜனங்களே வரதில்லை, நீ யாருக்கு விக்கறதுக்கு தினமும் வரே? என்று கேட்டேன்.

அதற்கு அவர்களின் பதில் மனதை தொட்டது. பல கட்டிட தொழிலாளர்கள் பட்டினியில் இருக்கின்றார்கள். நான் ஒரு பத்து பேருக்கு டிபன் கொண்டு வரேன். தெரு நாய்களுக்கும் பிஸ்கெட் வாங்கி வரேன். கோவிலை வெளியில் வலம் வருபவர்கள் பூ வாங்குவார்கள். எனக்கும் காமாக்ஷி குறை வைக்கவில்லை. என்னால் முடிந்த அளவு காலை மாலை இந்த உபகாரம் செய்யறேன் என்றார். நான் அவர்களை காமாக்ஷி என்றுதான் கூப்பிடுவேன். இன்று ஸ்ரீ அன்னபூரணியாய் தெரிந்தார். தர்மம் தலை காக்கும் என்றெல்லாம் தெரியாத படிக்காத “தாய்”.