தென்காசி:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கல்லாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கச் சென்ற நூற்றுக்கும் மேற்பட்டோர் தவித்து வருகின்றனர்.

மேலும், வழியில் இரண்டு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அவர்கள் திரும்ப முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கி தவிக்கும் மக்களை மீட்க முயற்சிகளை தீயணைப்புத்துறையினர் மேற்கொண்டு வருகிறனர்.