திருப்பூர்
திருப்பூரில் பெய்த திடீர் கனமழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருப்பூரில் சுமார் 10 மணி நேரம் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது.
எனவே திருப்பூரில் பல குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியது. அதிலும் குறிப்பாக, அறிவொளி நகர் பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இங்கு தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் வடக்கு பகுதியில் மட்டும் 15 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.