மும்பை

னது பொருட்களைக் குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க அதானி நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இ மாகர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவிலும் முன்னணியில் உள்ளது.   இந்த நிறுவனத்துக்கு பல லட்சக்கணக்கில் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.  இந்நிறுவனம் எலக்ட்ரானிக்ஸ், உள்ளிட்ட அனைத்து வகைப் பொருட்களையும் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்நிலையில் தற்போது அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துடன் ஃப்ளிப்கார்ட் இணைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நேரத்தில் தங்கள் பொருட்களைக் கொண்டு சேர்க்க அதானி நிறுவனத்துடன் இணைந்துள்ளதாக ஃப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது.

இதையொட்டி மும்பையில் 5,34,000 சதுர அடியில் ஒரு சரக்கு முனையம் உருவாக்கப்படுகிறது.  இம்முனையம் மூலம் மேற்கு இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்குப் பொருட்களை வழங்க நிறுவனம் உத்தேசித்துள்ளது,  வரும் 2022 ஆம் ஆண்டு மூன்றாம் நிதியாண்டு காலாண்டில் இந்த முனையம் செயல்பட உள்ளது

மேலும் சென்னையில் அதானி கனெக்ஸ் பி லிமிடெட் டேட்டா சேவை நிலையமும் தொடங்கப்பட உள்ளது.  மேலும் ரியல் எஸ்டேட், போக்குவரத்து, பசுமை எரிவாயு ஆகிய துறைகளிலும் இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது