சென்னை,
சிறிய நகரங்களில் விமான சேவையை செயல்படுத்துவதற்கான மத்திய அரசின் உதான் திட்டத்தில் தமிழக அரசு இணைந்துள்ளது.
குறைந்த கட்டணத்தில் உள்நாட்டு விமான சேவை வழங்கும் உதான் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஏப்ரல்27ந்தேதி தொடங்கி வைத்தார்.
உள்நாட்டு விமான சேவையை விரிவுப்படுத்தும் விதமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் 128 புதிய வழித்தடங்கலில் விமான சேவைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான சேவைகளை மேற்கொள்ள 5 விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, இமாச்சல் பிரதேச மாநிலம் ஷிம்லாவிலிருந்து டில்லி செல்லும் விமானம் மற்றும் ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து ஹைதராபாத் செல்லும் விமானங்களின் பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் தமிழகத்திலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, மத்திய அரசின் உதான் திட்டத்தில் இன்று கையெத்திட்டது தமிழக அரசு.
கோட்டையில் நடைபெற்ற இதுகுறித்த ஆலோசனை கூட்டத்தில் இதற்கான ஒப்பந்தத்தில் தமிழகமும் இணைந்துள்ளது.
இதையடுத்து ஓசூர், சேலம், நெய்வேலி நகரங்களில் சிறிய ரக விமானங்களின் வாயிலாக சேவை தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.