சென்னை

மிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்குகிறது.

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் விமான தளம் ஒன்று கடந்த 1940 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இலங்கை விடுதலை அடைந்த  பிறகு சென்னை உள்ளிட்ட தென் இந்திய நகரங்களில் இருந்து பலாலிக்கு விமான சேவைகள் நடைபெற்றன.   இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரையொட்டி விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் முடிவடைந்தது.   வட மாகாணத்தின் வளர்ச்சிப்பணிக்காக இந்தியா சுமார் ரூ.300கோடி நிதி உதவி அளித்தது.  அதையொட்டி பலாலி விமான தளம் புதுப்பிக்கப்பட்டு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.   இந்த விமான நிலையம் வரும் 17 ஆம் தேதி தொடங்க உள்ளது.

அதையொட்டி ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் யாழ்ப்பாணத்துக்கு விமான சேவையை தொடங்க உள்ளது.    சென்னை மற்றும் திருச்சியில் இருந்து இந்த நேரடி விமான சேவை வரும் 17 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.