புதுடெல்லி: உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை சிறப்பான முறையில் செயல்பட வேண்டுமானால், விமான எரிபொருளை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் கொண்டுவர வேண்டுமென மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, “எந்தத் துறையாக இருந்தாலும், உள்ளீட்டு கட்டணம் போட்டிக்குரிய ஒன்றாக இருக்க வேண்டும். எனவேதான், இந்த முடிவு குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதியாக இருக்கிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் வரி விதிப்பு விகிதம் வேறாக இருப்பதால், விமான எரிபொருளின் விலை அதிகரிக்கிறது.
எனவே, ஜி.எஸ்.டி. முறை கொண்டுவந்தால்தான் இதற்கு தீர்வு. இதுகுறித்து, ஜி.எஸ்.டி. கவுன்சிலிடம் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
இந்த விஷயம் நடந்தால்தான், எதையும் நம்மால் தீர்மானித்து, உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையை லாபகரமானதாக நடத்த முடியும். எனவே, அதை நோக்கியே எங்களின் முயற்சிகள் இருக்கும்” என்றார்.
– மதுரை மாயாண்டி